உள்ளூர் செய்திகள் (District)

அரியலூர் கலெக்டருக்கு சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருது

Published On 2023-01-26 07:07 GMT   |   Update On 2023-01-26 07:07 GMT
  • மாநில அளவில் தேர்தல் நடைமுறைகளுக்கான சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருதை அரியலூர் கலெக்டருக்கு கவர்னர் ரவி வழங்கினார்.
  • விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்பட்டன.

அரியலூர்

சென்னை கலைவாணர் அரங்கில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற மாநில விருதுகள் வழங்கும் விழாவில் வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்கள், அலுவலர்கள் மற்றும் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்பட்டன. அதில், அரியலூர் மாவட்டத்திற்கு தேர்தல் நடைமுறைகளுக்கான சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருதினை கலெக்டர் ரமணசரஸ்வதிக்கு கவர்னர் ரவி வழங்கி, பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, சிறந்த வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான விருதினை கவர்னர் ரவி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளத்துக்கு வழங்கினார். மேலும், சுவர் ஓவியப்போட்டி சிறப்பு பள்ளி மாநில அளவில் 2-வது இடம் பெற்ற அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் குறுக்குரோடு ஹெலன் கெல்லர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி மாணவன் சதீசுக்கும், இதேபோன்று மாநில அளவில் 3-வது இடம் பெற்ற மாணவன் அன்புமணிக்கும், ரங்கோலி போட்டியில் மாநில அளவில் 8-வது இடம் பெற்ற அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விழுதுடையான், பெரியாத்துக்குறிச்சியைச் சேர்ந்த ஆப்பிள் சுயஉதவிக்குழுவினருக்கும் கவர்னர் ரவிகையால் விருதுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News