உள்ளூர் செய்திகள்

உழவர் சந்தை மீண்டும் திறப்பு

Published On 2023-04-10 06:40 GMT   |   Update On 2023-04-10 06:40 GMT
  • வியாபாரம் களைகட்டியது
  • கடைகளுக்கு முன்வைப்பு தொகை கிடையாது என அறிவிப்பு

அரியலூர்,

அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையை 2000ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் உழவர் சந்தையை மூடிமறைத்தனர். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் பயன்பெறும் திட்டமான உழவர் சந்தையை மீண்டும் திறந்தனர்.கடைகளுக்கு முன்வைப்பு தொகை கிடையாது. வாடகை, மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் அனைத்தும் கிடையாது. தினசரி கொண்டு வரும் காய்கறிகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். தராசு படிகற்களும் வழங்கப்படுகின்றது.அரியலூர் வார சந்தை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனையாகும். வாரச்சந்தை கடைகள் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் வாரசந்தை ஞாயிற்றுகிழமை நடைபெறாமல் ஏலம் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.பம்பர் அடித்தது போல் யோகம், உழவர் சந்தை வியாபாரம் களைகட்டி வருகின்றது. தினசரி காய்கறிகள் கொண்டுவருவதால் சர்யான எடையில், சரியான விலையில் விற்பனை நடைபெறுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

Tags:    

Similar News