உள்ளூர் செய்திகள் (District)

அரியலூர் கல்லங்குறிச்சி கிராமத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம்

Published On 2023-01-11 06:45 GMT   |   Update On 2023-01-11 06:45 GMT
  • அரியலூர் கல்லங்குறிச்சி கிராமத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
  • வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்

அரியலூர்:

அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி கிராமத்தில், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை சார்பில் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் மற்றும் பேரணியை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மருந்து செலுத்துவதன் மூலமாகவும், தெரு நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து வெறி நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலமாகவும் வெறி நோய் பரவலை தடுக்க முடியும். வெறி நோயின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் அறிய செய்தல், வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி அளித்தல், நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து வெறி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார். இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஹமீதுஅலி மற்றும் கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News