உள்ளூர் செய்திகள்

கண் பரிசோதனை முகாம் நடந்தது.

திருத்துறைப்பூண்டியில், கண் பரிசோதனை முகாம்

Published On 2023-05-01 09:10 GMT   |   Update On 2023-05-01 09:10 GMT
  • முகாமில் 336 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
  • 112 பேர் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.

பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் மாரிமுத்து, ஆசிரியர்கள் பாலமுருகன், பாலசுப்பி ரமணியன், சேதுராமன், மீனாட்சி சுந்தரம், நூலகர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபிக் அனைவரையும் வர வேற்றார்.

முகாமை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால் அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.

மேலும், பழமையான இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விழிப்புணர்விற்காக கண் சிகிச்சை முகாம் நடத்தி இருப்பது பாராட்டத்தக்கது என்றார்.

முகாமில் டாக்டர்கள் அக்சய் சஞ்சய் வாக், அக்சய் கிஷோர் உம்ரே, யுவராஜ் மாதவ், செவிலியர் மகா தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் 336 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

அதில் 112 பேருக்கு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தெய்வ சகாயம், சக்கரபாணி, நடராஜன், விஜயகுமார், செல்வம், தமிழரசன், இளநிலை உதவியாளர் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News