உள்ளூர் செய்திகள்

சென்னையில் நடந்த விழாவில், மத்திய அமைச்சர்

எல்.முருகன் ஹெல்த் எக்சலன்ஸ் விருதை வழங்கினார்.

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விருது

Published On 2023-03-15 08:38 GMT   |   Update On 2023-03-15 08:38 GMT
  • ஓசூரில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
  • சமூகத்திற்கு சிறப்பாக அளித்தமைக்காக “டைம்ஸ் ஹெல்த் எக்சலன்ஸ்” விருது வழங்கப்பட்டது.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு, " டைம்ஸ் ஹெல்த் எக்சலன்ஸ் விருது " வழங்கப்பட்டுள்ளது. ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார திட்டம், சுகாதார முன் முயற்சி என சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை சமூகத்திற்கு சிறப்பாக அளித்தமைக்காக "டைம்ஸ் ஹெல்த் எக்சலன்ஸ்" விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை, சென்னை அயாட் ரீஜென்சி ஓட்டலில் கடந்த 11-ந்தேதி நடந்த விழாவில், மத்திய மந்திரி எல்.முருகன் வழங்க, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாளாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News