புகையில்லா போகி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு பேரணி
- பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார்.
நகர்நல அலுவலர் லெஷ்மி நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து, டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் ஞானாம்பிகை கல்லூரி மாணவிகள், தியாகி நாராயணசாமி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள், டி.பி.டி.ஆர். மாணவர்கள் கலந்து கொண்டு பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டியும், வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் தங்களது திடக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்கி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றனர்.
நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோ கிக்கப்பட்டது.
பேரணியில் மயிலாடு துறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.