உள்ளூர் செய்திகள்

நள்ளிரவு வாகன சோதனையில் 'நம்பர் பிளேட்' இல்லாத 77 வாகனங்கள் மீது வழக்கு

Published On 2022-12-23 09:15 GMT   |   Update On 2022-12-23 09:15 GMT
  • நெல்லையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளனர்.
  • சோதனையில் ‘நம்பர் பிளேட்’ இல்லாத மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 77 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நெல்லையில் போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக மாநகர பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ஜவுளிக்கடைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி மாநகர பகுதியில் உள்ள டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, கே.டி.சி.நகர், பெருமாள்புரம், டக்கம்மாள்புரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவிட்டார்.

அதன்படி கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் மேற்கு மண்டல துணை கமிஷனர் சரவணக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் மாநகரில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு வரையில் நடைபெற்ற இந்த சோதனையில் 'நம்பர் பிளேட்' இல்லாத மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 77 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News