உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அடைப்பு

Published On 2022-08-18 08:18 GMT   |   Update On 2022-08-18 08:18 GMT
  • வாகனங்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
  • மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், ரயில்வே ரோடு, பிடாரி வடக்குவீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடு உள்ளிட்டவை சுற்றித் திரிவதாகவும், இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனை அடுத்து சாலைகளில் கால்நடைகளை விடக்கூடாது மீறினால் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல்கட்டமாக சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரிராஜசேகர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ராஜகோபால், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் அலெக்சாண்டர், டேவிட் உள்ளிட்ட பணியாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர்.

பின்னர் மாடுகளின் உரிமையாளர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து மாடுகளை சாலைகளில் நடமாட விட்டால் அபராதம் விதிப்பதுடன், மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News