உள்ளூர் செய்திகள் (District)

உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன

Published On 2023-01-13 09:16 GMT   |   Update On 2023-01-13 09:16 GMT
  • திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை வகித்தார்.

செயல் அலுவலர் (பொ) விமலா முன்னிலை வகித்தார்.

உழவாரப்பணிக் குழு செயலாளர் ஜெயபிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

உழவாரப்பணி குழு அமைப்புச் செயலாளர் எடையூர் மணிமாறன், சர்வாலய உழவாரப்பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்துரை ராயப்பன், பத்திரிக்கையாளர் முனைவர் ரவிச்சந்திரன்சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சிறப்புரையுயாற்றினர்.

யோகா ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் மாணவிகளுக்கு மூச்சு பயிற்சி கற்றுக் கொடுத்தார்.

உதவி திட்ட அலுவலர் ஆசிரியை பிரியங்கா, பட்டதாரிஆசிரியர் கழக மாநில பொருளாளர் துரைராஜ், வட்ட தலைவர் சிங்காரவேலு, பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்துகுமரன் மற்றும் ஆசிரியர்கள் ஆனந்தி ரூபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்து கொண்டு கோயிலில் கற்கள், புற்கள் அகற்றினர். திட்ட அலுவலர் ஆசிரியை கலையரசி நன்றி கூறினார்.

Tags:    

Similar News