உள்ளூர் செய்திகள்

 கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் செய்தவர்களை படத்தில் காணலாம். 

கடலூரில் பரபரப்பு: போக்குவரத்து மண்டல அலுவலகத்தை நிர்வாகிகள் முற்றுகையிட்டு தர்ணா

Published On 2022-11-22 07:46 GMT   |   Update On 2022-11-22 07:46 GMT
  • ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும்.
  • அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கடலூர்:

சி.ஐ.டி.யு மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும். அதிகாரிகள் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் பொதுச் செயலாளர் முருகன் கண்டன உரை ஆற்றினார்.

இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News