உள்ளூர் செய்திகள்
- 4-ம் தேதி வீட்டில் இருந்த மாணவன் காணவில்லை.
- எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள கே.புதூரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் மதன்குமார் (வயது18). இவர் சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4-ம் தேதி வீட்டில் இருந்த மாணவன் காணவில்லை. இதனால் அவரை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.