செங்கோட்டை அருகே அரசு பள்ளிக்கு பொதுப்பாதை திறப்பு
- பள்ளிக்கு செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சுமார் அரை கிலோ மீட்டா் தூரம் மெயின்ரோடு வழியாக சென்று வந்துள்ளனா்
- பள்ளிக்கு செல்லும் இளம்சிறார்களின் பயண தூரத்தை குறைத்திடும் வகையிலும் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் வகையில் எஸ்.ஆர்.கே. தெருவிலிருந்து குறுக்கு வழியில் சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் பள்ளிக்கு சென்றடையும் வகையில் பொதுப்பாதை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் 21,22,23,24 ஆகிய வார்டு பகுதிகளை சேர்ந்த எல்.கே.ஜி. ஆங்கில வழி கல்வி, தமிழ்வழி கல்வி மற்றும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இப்பள்ளிக்கு செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சுமார் அரை கிலோ மீட்டா் தூரம் மெயின்ரோடு வழியாக சென்று வந்துள்ளனா். இதன் காரணமாக பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிய நிலையில் இதற்கான தீர்வு வேண்டி பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு இப்பள்ளிக்கு செல்லும் இளம்சிறார்களின் பயண தூரத்தை குறைத்திடும் வகையிலும் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்லும் வகையில் எஸ்.ஆர்.கே. தெருவிலிருந்து குறுக்கு வழியில் சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் பள்ளிக்கு சென்றடையும் வகையில் பொதுப்பாதை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 21-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் சுகந்திமாடசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலு முன்னிலை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் பத்மாவதி வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து நகர்மன்ற துணைத்தலைவா் பொதுப்பாதையை திறந்து வைத்து மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியா் பீட்டா்ஜூடு தத்தோஸ், பள்ளி ஆசிரியா் டேனியல், அ.தி.மு.க. வார்டு பிரதிநிதி ரேசன்கடை கணேசன், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து உதவிய முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலுவை பொதுமக்கள் பாராட்டினா்.