உள்ளூர் செய்திகள்

சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு ஆலோசனை கூட்டம்

Published On 2023-01-22 08:10 GMT   |   Update On 2023-01-22 08:10 GMT
  • சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • “சேலம் மாநகரில் கடந்த 2021- ம் ஆண்டில் 24 கொலை சம்பவங்கள் நடந்தது. 2022- ல் 15 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.

அன்னதானப்பட்டி:

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் "சேலம் மாநகரில் கடந்த 2021- ம் ஆண்டில் 24 கொலை சம்பவங்கள் நடந்தது. 2022- ல் 15 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் போலீசாரின் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் குற்றச் செயல்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், வழக்குகள் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தி முடிக்க ஏதுவாக இருந்து வருகிறது.

மேலும் கேமிராக்கள் இல்லாத பகுதிகளில் அவற்றை பொருத்த நடவ–டிக்கைகள் எடுக்கப்படும். கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை–கள் எடுக்க வேண்டும். பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை சரியாக நடத்தி, அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி, உதவி கமிஷனர்கள் சரவணன், நாகராஜன், வெங்கடேசன், அசோகன், சரவண குமரன், லட்சுமி பிரியா, ஜெயந்தி, இன்ஸ்பெக்டர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News