உள்ளூர் செய்திகள்

மழைநீரில் மூழ்கியுள்ள பாதிக்கப்பட்ட பயிரை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம் காட்டும் விவசாயி.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்-எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-11-10 09:18 GMT   |   Update On 2022-11-10 09:18 GMT
  • 20ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி மற்றும் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தனர்.

சீர்காழி:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனால் சீர்காழி, கொள்ளிடம், ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்ட ங்குடி, கேவரோடை, வெள்ளப்பள்ளம், திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி மற்றும் நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவ்வபோது மழை பெய்துவருவதால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடியாமல் உள்ளது.

இதனிடையே கொள்ளிடம் வட்டாரம் பன்னீர்கோட்டம், ஆரப்பள்ளம், வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சீர்காழி எம்.எல்.ஏ. எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழைநீர் வடிந்த பின்னர் உரிய கணக்கீடு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசா யிகளிடம் உறுதியளித்தனர். ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் உடனி ருந்தார்.

Tags:    

Similar News