உள்ளூர் செய்திகள்

நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேறும் அசுத்த நுரை

Published On 2023-10-10 09:19 GMT   |   Update On 2023-10-10 09:19 GMT
  • ஆற்றுநீருடன் கலக்கும் சாக்கடை நீர்
  • காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

நீலாம்பூர்,

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் என்ற இடத்தில் நொய்யல் நதி செல்கிறது.

இதன் காரணமாக ராவுத்தூருக்கு செல்வதற்கு என்று ஆற்றுப்பாலம் உள்ளது.

இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றில் தற்போது குறைந்த அளவு தண்ணீரே சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆற்றுப்பாலத்திற்கு கீழ் பகுதியில் அனுமதி இன்றி நொய்யல் ஆற்று நீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது.

இதன் காரணமாக ஆற்று நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் நுரை தழும்பி நுரையுடன் ஆற்று நீர் சென்று வருகிறது.

மேலும் அவ்வாறு நுரை தழும்பி காற்றுடன் மேலே பறந்து வந்து வாகன ஓட்டிகள் மீதும் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அவ்வழியாக நடந்து செல்ப வர்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

எனவே நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தி கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News