உள்ளூர் செய்திகள்

மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி காப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் உத்தரவு

Published On 2023-03-04 09:29 GMT   |   Update On 2023-03-04 09:29 GMT
  • மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது

விழுப்புரம்:

மயிலம் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் விடுதிகளில் தங்கி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய உணவு, அடிப்படை பொருட்கள், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வழிவகுத்துள்ளார்.அதனடிப்படையில், மயிலம் ஆதிதிராடர் நல மாணவியர் விடுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, படுக்கையறை வசதி, மின் வசதி, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாள்தோறும் விடுதியினை தூய்மைப்படுத்தி சுகாதாரமாக வைத்துக்கொள்ள விடுதி காப்பாளாருக்கு அறிவுறுத்தப்பட்டது. விடுதி ஆய்வி ன்போது, காப்பாளர் விடுதியில் இல்லா மலும், தின ந்தோறும் விடுதியில் தங்காமல் சென்று விடுவதும், மாணவி யர்கள் தங்கி பயில நடவடிக்கை மேற்கொ ள்ளாமல் இருந்ததும், மாணவி யர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் முழுமையான அளவில் இல்லாது இருப்பதும் கண்டறியப்பட்டது. ஆகையால் காப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, திடீர் ஆய்வு மேற்கொள்ளும் நேரத்தில், விடுதியில் ஏதேனும், முறைகேடுகள் கண்டறியும் பட்சத்தில், விடுதி காப்பாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்     மேலும், நடப்பாண்டிற்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தினை சிதற விடாமல் நல்ல முறையில் படித்த அதிக மதிப்பெண் பெற்றிட வேண்டும் என மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார்.   ஆய்வின்போது, திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணி உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News