உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி பதில்

Published On 2023-06-16 06:14 GMT   |   Update On 2023-06-16 09:22 GMT
  • செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதலமைச்சர்.
  • மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அ.தி.மு.க.வையும் என்னையும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஏதாவது சொல்லிவிட்டால் தனக்கு பாதிப்பு என அஞ்சுகிறார் முதலமைச்சர். முந்தைய ரெய்டுகளின்போது மு.க.ஸ்டாலின் மௌனம் காத்தது ஏன்?

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நாடகமாடுகிறார் செந்தில் பாலாஜி. 2 ஆண்டுகளில் ரூ.30,000  கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி.

நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு தொடுத்தார் ஆர்.எஸ்.பாரதி. என் மீதான வழக்குகளை துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறேன்.

நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிய நீங்கள் மக்களை போய் சந்திக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதட்டத்துடன் பேசியதற்கு காரணம் என்ன? வழக்குகளை தி.மு.க.வினர் துணிச்சலோடு சந்திக்க வேண்டும். வழக்கை சந்தித்து குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News