உள்ளூர் செய்திகள்

சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு மின்னணு கல்வியறிவு பயிற்சி

Published On 2022-07-02 09:25 GMT   |   Update On 2022-07-02 09:25 GMT
  • பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  • பயிற்சியில் இணையத்தில் தகவல்களை சேகரிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது மற்றும் மின்னணு பண பரிமாற்றம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் டிஜிட்டல் கல்வியறிவு என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒருநாள் பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக்கழகம், மாவட்ட திறன் பயிற்சி மையம் மற்றும் தேசிய தகவலியல் மையம் இணைந்து நடத்திய இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் பிராங்கிளின் திட்டவிளக்க உரையாற்றினார். திட்ட உதவி அலுவலர் சாமதுரை மகளிர் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்தார்.

பயிற்சியினை தேசிய தகவலியல் மைய இயக்குனர் ஆறுமுகநயினார், மகாத்மாகாந்தி வேலைவாய்ப்பு திட்ட தேசிய உறுப்பினர் வரதராஜ் ஆகியோர் நடத்தினர்.

பயிற்சியில் இணையத்தில் தகவல்களை சேகரிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது மற்றும் மின்னணு பண பரிமாற்றம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

Tags:    

Similar News