உள்ளூர் செய்திகள் (District)

கைது செய்யப்பட்ட ராஜேந்திரன்.

அடகு கடையில் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஊழியர் கைது

Published On 2022-06-13 09:22 GMT   |   Update On 2022-06-13 09:22 GMT
  • புகாரின்பேரில் மெலட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  • சாலியமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டில் நகைகளை பதுக்கி வைத்து விட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே இரும்புதலை கிராமத்தில் திருப்பத்தூரை சேர்ந்த சகோதரர்கள் தமிழ்செல்வன், சரவணன், கார்த்திகேயன், ஆகியோர் நடத்தி வந்த நகை அடகு கடையில் கடந்த வெள்ளி–க்கிழமை கடையில் வேலை–பார்த்து வந்த ராஜேந்திரன் (வயது 72) என்பவரை சிலர் தாக்கி நகைகளை கொள்ளை–யடித்து சென்றனர்.

இது தொடர்பான புகாரின்பேரில் மெலட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாபநாசம் டி.எஸ்.பி. பூரணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து–கிருஷ்ணன், தனிபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதில் அதே அடகு கடையில் பல வருடமாக வேலை பார்த்து வந்தவர்களில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் ராஜேந்திரனே நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்து. சாலியமங்கலத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டில் நகைகளை பதுக்கி வைத்து விட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து ராஜேந்திரனை கைது செய்த போலீசார் கொள்ளை போன 37½ பவுன் நகைகள், 2 ஆயிரத்து 601 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News