உள்ளூர் செய்திகள்

புலிகள் காப்பகத்தில் நுழைந்த ராம்ஜிநாயக்கர் என்பவரை பிடித்த வனத்துறையினர்.

புலிகள் காப்பக வனப்பகுதியில் சுற்றி திரிந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2023-04-30 09:18 GMT   |   Update On 2023-04-30 09:18 GMT
  • புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததும் தெரிய வந்தது.
  • அந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது‌.

சத்தியமங்கலம், ஏப்.30-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை யானை, புலிகள் என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதிகளில் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கேர்மாளம் வனச்சரகம் குத்தியாலத்தூர் காப்புக்காட்டு பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து ஒரு முதியவர் வந்தார்.

இதை தொடர்ந்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கர்நாடகா மாநிலம் அண்டே குருபன்தொட்டி கிராமத்தை சேர்ந்த ராம்ஜி நாயக்கர் ( வயது 50) எனவும்,.

அவர் பாதுகாக்கப்பட்ட அரசு காப்புக் காட்டு புலிகள் காப்பக பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துனை இயக்குனரின் உத்தரவின்படி அந்த முதியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் காப்புக் காடுகளில் அத்துமீறி நுழையக்கூடாது என வனத்துறையினர் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News