பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது
- வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொ டர்ந்து குறைந்து வந்தது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 77.27 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடி 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது.அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅ டியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.89 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.05 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.