விஷம் குடித்து விசைத்தறி உரிமையாளர் தற்கொலை
- கடன் பிரச்சனையால் மன வருத்தத்தில் இருந்த விசைத்தறி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள சேமலை பாளை யத்தை சேர்ந்தவர் கதிரே சன் (37). இவர் அரச்சலூர் அருகே உள்ள மீனாட்சி வலசு பகுதியில் தறிப்பட்டறை ஒன்றை லீசுக்கு எடுத்து கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
இவர் வங்கி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் கடன் பெற்று தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் சரியான வருமானம் இல்லாததால் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாதவும் கூறப்படுகிறது.
இதனால் அவரால் கடன் கட்ட முடியவில்லை. தொடர்ந்து கடன் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன வருத்தத்தில் கதிரேசன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கதிரேசன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்டு அவரது மனைவி கவிதா அவரிடம் விசாரித்தார். அப்போது கதிரேசன் எலி மருந்தை (விஷம்) தின்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மீட்டு பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.