உள்ளூர் செய்திகள்

பெண் வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2022-07-21 09:22 GMT   |   Update On 2022-07-21 09:22 GMT
  • கோபமடைந்த பசூல் அகமது இதுபோல் தான் பலமுறை சொல்லி வருகிறாய் என தகாத வார்த்தையில் பேசி கத்தியால் குத்தினார்.
  • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருப்பூரை சேர்ந்த பசூல் அகமது (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சித்தோடு:

பவானி லட்சுமி நகர் கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ரேவதி (52). வியாபாரி. இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியியை சேர்ந்த ஷாஜகான் என்பவரது மகன் பசூல் அகமது என்பவரிடம் வெங்காயம் வாங்கி உள்ளதாக தெரிகிறது.

இவர்கள் இருவருக்கும் வெங்காயம் வாங்கியதில் வரவு செலவு கணக்கு இருந்துள்ள நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வாங்கிய வெங்காயத்திற்கு ரூ.60 ஆயிரம் பாக்கி தொகை ரேவதி தர வேண்டி இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ரேவதியின் வீட்டிற்கு வந்த பசூல்அகமது பணம் கேட்டார். அப்போது சிறிது நேரம் கழித்து பணம் தருவதாக ரேவதி தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பசூல் அகமது இதுபோல் தான் பலமுறை சொல்லி வருகிறாய் என தகாத வார்த்தையில் பேசி கத்தியால் குத்தினார். இதில் ரேவதியின் வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதை தடுக்கும் பொழுது இடது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரேவதி 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசாரிடம் ரேவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருப்பூரை சேர்ந்த பசூல் அகமது (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News