உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஏ.பி.மகாபாரதி.

விவசாயிகள் உழவன் செயலி மூலம் அறுவடை பணிகள் மேற்கொள்ளலாம்- கலெக்டர் தகவல்

Published On 2023-02-14 07:21 GMT   |   Update On 2023-02-14 07:21 GMT
  • இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
  • பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு வாடகை முறைப்படுத்தப்பட்டு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 450 மற்றும் டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் எந்திரங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு சில இடங்களில் இடைத்தரகர்கள் அதிகமான வாடகை வசூவிப்பதாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசு மான்யத்தில் வழங்கப்பட்ட அறுவடை எந்திரங்கள் மற்றும் மாவட்டத்தில் இருப்பில் உள்ள தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் பட்டியல் (மாவட்ட வட்டார வாரியாக உரிமையாளர் பெயர், முகவரி, எந்திர வகை மற்றும் செல்போன் எண்னுடன்) தற்போது உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் செல்போன் மூலம் உழவன் செயலியில் பதிவு செய்து, இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைகு மிகாமல் செலுத்தி பயன்பெறலாம்.

மேலும், வேளாண்மை பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880 எனவும் டயர் எடப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 எனவும் அரசால் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

ேமலும், நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் கோரினால் வட்டாட்சியர்கள் வேளாண் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறை நாகப்பட்டினம் செயற்பொறியாளர் தொலைபேசி எண். 94420 49591, உதவி செயற்பொறியாளர் தொலைபேசி எண் 94432 77456 உதவிப் பொறியாளர் (வே.பொ), தொலைபேசி எண் 94452 40064) ஆகியோறை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News