மழையால் மூழ்கிய நெல் வயல்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
- மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.20,000/- இழப்பீடு வழங்கிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுப்பணித்துறை ஊழியர்கள் யாரும் வராததால் மழை நீரையும் வெளியேற்ற இயலவில்லை.
பூதலூர்:
பூதலூர் தாலுக்காவில் நேற்று ஒரே நாளில் பெய்த அதிகனம ழையினால் வெண்டையம்பட்டி, கோட்டரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
முன்புபெய்த கனமழை யினால் அழிந்த பயிர்களுக்கு மாற்றாக மீண்டும் இரண்டாவது முறையாக நடவு செய்தநிலையில், மீண்டும் மழையில் மூழ்கி முற்றிலும் அழிந்ததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
வாரிகளும், வாய்க்கா ல்களும் தூர்வா ரப்படா ததாலும், பராமரிப்பு பொதுப்பணித்துறை திருச்சி வசம் உள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் யாரும் வராததால் மழை நீரையும் வெளியேற்ற இயலவில்லை.ஆகவே மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.20,000/- இழப்பீடு வழங்கிட கோரியும், வெள்ள நீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை நடவடிக்கைகள் எடுக்க கோரியும், வேளாண்துறை, வருவாய்துறை அதிகாரிகள் சேத பாதிப்பை உடனடியாக பார்வையிட்டு கண்டெடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மழையால் மூழ்கிய வெண்டயம்பட்டி கிராம வயல்களில் இறங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர்.முகில், தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப ட்டனர்.
கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கள்கிழமை (19.12.22) பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.