உள்ளூர் செய்திகள்

காட்டு பன்றிகள் புகுந்து சேதப்படுத்திய வயல்கள்.

சாகுபடி வயல்களில் நாற்றங்காளை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்

Published On 2023-06-03 09:42 GMT   |   Update On 2023-06-03 09:42 GMT
  • இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
  • விவசாயிகள் குறுவை மற்றும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த வீரமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் குறுவை மற்றும் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள சாகுபடி வயல்களில் காட்டு பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டும், சாகுபடி பருவத்தின் போதும் இதேபோல், நெற்பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்தியதாகவும், இந்த ஆண்டும் இதேபோல் நடைபெற்று வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெற்பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிடாமல் இருக்க வைக்கோல் மூட்டம் போடப்பட்டுள்ளது. அதையும் களைத்து, நாற்றங்காளை காட்டு பன்றிகள் நாசமாக்குகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்டு பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News