உள்ளூர் செய்திகள்

பாண்டமங்கலத்தில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பாண்டமங்கலம் பகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாம்

Published On 2023-03-11 09:45 GMT   |   Update On 2023-03-11 09:45 GMT
  • கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • முகாமில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பாண்டமங்கலம் பேருராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை மற்றும் கடைவீதி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் அருண் தலைமையில் சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட நடமாடும் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பரிசோதனை செய்தனர். இதில் 119 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

காய்ச்சல் பாதிப்பு உள்ள 2 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

முகாமினை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவனேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், வினோத் பாபு, ஆங்கல்ஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் இம்முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News