உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

உரிமம் இன்றி வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்தால் அபராதம் அதிகாரி எச்சரிக்கை

Published On 2022-07-14 06:04 GMT   |   Update On 2022-07-14 06:04 GMT
  • ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் விற்பனை செய்யப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு வியாபாரிகள் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அனுமதி சீட்டு பெறாமல் செல்லும் வாகனங்களுக்கு வேளாண்மை ஒழுங்கு ப்படுத்துதல் சட்டப்படி உரிய இணக்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் - ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் விற்பனை செய்யப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு வியாபாரிகள் உரிமம் பெற வேண்டும் என ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து ள்ளதாவது:

தானியங்களான நெல், சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம், தினை, குதிரைவாலி, வரகு, சாமை, துவரை, உளுந்து, பச்சை ப்பயிறு, கொண்டை க்கடலை, பட்டாணி, மொச்சை, காராமணி, கொள்ளு, முழு அல்லது உடைக்கப்பட்ட வேர்கடலை (தோலுடன் கூடியது மற்றும் தோல்நீக்கிய பருப்புகள்), நல்லெண்ணை விதை அல்லது எள், ஆமணக்கு (தோலுடன் மற்றும் தோல் நீக்கப்பட்ட), சூரியகாந்தி விதைகள் அல்லது கொட்டைகள், பருத்தி விதை, வேப்ப விதைகள், தேங்காய்நார், புகையிலை, மரவள்ளிக்கிழங்கு, மரவள்ளி பட்டைகள், மரவள்ளி கிழங்கு மாவு, மரவள்ளி மாவுச்சத்து, மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய், அனைத்து வகை பூண்டு, மஞ்சள் மற்றும் கொத்தமல்லி விதைகள் (தனியா), ஏலக்காய், பாக்கு (முழுமையானது அல்லது உடைக்கப்பட்டது), புளி, முந்திரிப் பருப்புகள், இஞ்சி (இஞ்சி, சுக்கு), கரும்பு வெல்லம் (வெல்லப்பொடி, பழுப்பு சக்கரை இதர வகைகள்), பனைவெல்லம், கச்சாரப்பர், (இளநீர் நீங்கலாக)

திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட வேளாண் விளைப் பொருட்களை கொள்முதல், விற்பனை, சேமித்தல், கையாளுதல், உருமாற்றம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வியாபாரி கள் ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் ஒருங்கிணைந்த உரிமம் பெற்றிட வேண்டும்.

விளைப் பொருட்களை கொள்முதல், விற்றுமுதல், கையாலுதல், உருமாற்றம் செய்தல் போன்ற பணிகளுக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லும்பொழுது விற்பனைக்கூடத்தில் அனுமதி சீட்டு பெற்றுச் செல்ல வேண்டும். அனுமதி சீட்டு பெறாமல் செல்லும் வாகனங்களுக்கு வேளாண்மை ஒழுங்கு ப்படுத்துதல் சட்டப்படி உரிய இணக்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News