உள்ளூர் செய்திகள்

ஹெல்மெட் அணிந்து வந்த குடும்ப தலைவிகளுக்கு 1 லிட்டர் இலவச பெட்ரோலுக்கான கூப்பன் வழங்கப்பட்டது.

ஹெல்மெட் அணிந்து வந்த குடும்ப தலைவிகளுக்கு இலவச பெட்ரோல்

Published On 2023-04-07 09:05 GMT   |   Update On 2023-04-07 09:05 GMT
  • தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • அதேபோல், உங்கள் தந்தை, கணவன் மற்றும்– உறவினர்களிடமும் அறிவுறுத்துங்கள்.

தஞ்சாவூர்:

தஞ்சை ஜோதி அறக்கட்ட ளை, தஞ்சை நகர போக்கு வரத்து காவல்துறை யுடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து வரும் குடும்ப தலைவிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த குடும்ப தலைவிகளை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 1 லிட்டர் இலவச பெட்ரோலுக்கான கூப்பன்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்:-

குடும்ப தலைவிகளான நீங்கள் எப்படி அரசின் சட்டதிட்டங்களை மதித்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து வருகிறீர்களோ அதேபோல், உங்கள் தந்தை, கணவன் மற்றும்– உறவினர்களிடமும் அறிவு றுத்துங்கள் என்றார்.

நிகழ்ச்சியில்போக்கு வரத்து உதவி இன்ஸ்பெ க்டர் பாஸ்கரன், போக்கு வரத்து சிறப்பு உதவி இன்ஸ்பெ க்டர்கள் ரமேஷ், ரமேஷ்குமார், ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாளர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர் .

Tags:    

Similar News