உள்ளூர் செய்திகள் (District)

தமிழக மீனவர்கள் கைதுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

Published On 2024-06-23 05:54 GMT   |   Update On 2024-06-23 05:54 GMT
  • ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
  • இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது அத்துமீறிய செயலாகும்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்துவிட்டு அதிகாலையில் கரைக்கு திரும்பிய ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது அத்துமீறிய செயலாகும்.

தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைப்பிடிக்கப்பட்டதால் மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் இது போன்ற தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 18 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News