உள்ளூர் செய்திகள்

நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

Published On 2023-06-06 09:56 GMT   |   Update On 2023-06-06 09:56 GMT
  • பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
  • விவசாயிகள் உழவு பணியை மேற்கொள்ள இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் அக்கினி நட்சத்திரம் நிறைவடைந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக்கி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு திடீர் கனமழை பெய்தது.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், பரவை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, திருவாய்மூர், எட்டுக்குடி, ஈசனூர், வாழக்க ரை, கீழையூர்,சாட்டியக்குடி, கீழ்வேளூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் பல்வேறு நகர் பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதோடு பெரும்பாலான வாகன ஓட்டிகள் நனைந்த படி பயணம் மேற்கொண்ட னர்.

மேலும் இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் உழவு பணியை மேற்கொள்ள இந்த திடீர் மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்துள்ளனர்.

Tags:    

Similar News