உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி?

Published On 2023-09-23 09:52 GMT   |   Update On 2023-09-23 09:52 GMT
  • பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

மெலட்டூர்:

பாபநாசம் தாலுகா சாலியமங்களத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பொதுமக்கள் கடைபி டிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விவேகானந்தா சமூக கல்வி மையப் பொறுப்பாளர் சுசீலா தலைமை வகித்தார். சுய உதவி குழு பொறுப்பா ளர்கள் அனிதா, சண்முக ப்பிரியா ஆகியோர் முன்னிலை வைத்தனர்

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைகாலங்களில் பொதும க்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வது குறித்தும் மழைநீர் தேங்கி நிற்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவக்கூடும் என்பதால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் மழைகாலங்களில் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மேரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் கவுரி, ராமலெட்சுமி, பரமேஸ்வரி, சண்முகப்பி ரியா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News