உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா

Published On 2023-04-17 09:14 GMT   |   Update On 2023-04-17 09:14 GMT
  • கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கோவை, -

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணி வேண்டும், சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறு த்தப்பட்டு வருகிறது.

இருமல், காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 381 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியானது.

இதில் கடந்த சில மாதங்களாக இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 3 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர். தற்போது பாதிப்பு காரணமாக 274 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News