தஞ்சையில், நவீன அங்கன்வாடி திறப்பு
- முன்னதாக சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார்.
- சின்னையாபாளையம் பகுதியில் கழிவறைகளை திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலைஞர் அறிவாலயம் அருகே 29-வது வார்டு ரெசிடென்ஸ் பங்களா சாலையில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. பழமை வாய்ந்த இந்த அங்கன்வாடியை புதுப்பித்து நவீன முறையில் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நவீன அங்கன்வாடியை திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக அவர் அங்கன்வாடி அருகே சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கன்வாடி அருகே சின்னையாபாளையம் பகுதியில் கழிவறைகளை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, மேத்தா, ரம்யா சரவணன், கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி, பகுதி செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.