உதயமார்த்தாண்டபுரத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்
- மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் தாஹிர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் ஆகிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், அதனை போக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினருடன் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் முறைகேடாக மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதால் தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே, அவ்வாறு உறிஞ்ச ப்படும் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிக்கப்படும் மற்றும் மின்மோட்டார்கள் அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, ஒரு சில இடங்களில் மட்டுமே இணைப்புகள் துண்டிக்கப்ப ட்டது.
எனவே, உடனடியாக முறைகேடாக எடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.