உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தஞ்சை, திருச்சி மாவட்ட ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-07-14 09:22 GMT   |   Update On 2022-07-14 09:22 GMT
  • காவிரி ஆறு தமிழக மக்களின் தாகத்தை தீர்த்து, உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையப்பெற்றது மேட்டூர் அணை.
  • கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க கூடும்.

காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக திகழ்வது மேட்டூர் அணை. கர்நாடக மாநில குடகு பகுதியில் தொடங்கும் காவிரி ஆறு தமிழக மக்களின் தாகத்தை தீர்த்து, உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையப்பெற்றது மேட்டூர் அணை.

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தி தமிழக மக்களின் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள மக்களின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்கும் ஒரு அணை யாக அமைந்து ள்ளது.

வழக்க மாக காவேரி டெல்டா பாசன பகுதிக்கு ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்படும்.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் முன் எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் 24 ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முழு மூச்சாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் பருவ மழை தொடங்குவதற்குள் குறுவை அறுவடை செய்வதற்கு ஏதுவாக பணிகளை முடுக்கிவிட்டு செய்து கொண்டுள்ளனர்.இதற்கிடையே மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 109 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் திறக்கப்படும் தண்ணீர் அப்படியே கொள்ளிடத்தில் திருப்பி விடக் கூடிய வாய்ப்பு உள்ளது. கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க கூடும்.மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களை பயன்பெறும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால, மற்றும் உயர் கொண்டான் நீட்டிப்பு, புள்ளம்பாடி கா ல்வா ய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு அதனோடு இணைந்த ஏரிகளை நிரப்ப நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் பருவநிலை சீராக இருக்கும் நிலையில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டா–ன்நீட்டிப்பு வாய்களில் தண்ணீர் திறந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீராக செயல்பட்டால் இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பி தண்ணீரை சேமிக்க வழி ஏற்படும்.எனவே பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினர் விரைவாக செயல்பட்டு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்படும் தண்ணீரை வீணாக்காமல் ஏரிகளை நிரப்ப ஆவனசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News