உள்ளூர் செய்திகள்

மண் பானை தயார் செய்யும் தொழிலாளி.

குமரி மாவட்டத்தில் மண் பானைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

Published On 2023-01-06 07:18 GMT   |   Update On 2023-01-06 07:18 GMT
  • பொங்கல் பண்டிகையையொட்டி தயாராகிறது
  • பொங்கல் தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்பையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகர்கோவில்:

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொேரானா பரவல் காரணமாக பொங்கல் பண்டிகை எளிய முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையை யடுத்து புதுமணத் தம்பதி யினர் புத்தாடைகள் அணிந்து வீடுகள் முன்பு பானைகளில் பொங்கலிடு வார்கள். கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகரப்புறங்களி லும் வீடுகள் மற்றும் கோவில் களில் மண் பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி வழக்கமாக நடந்து வருகிறது.

பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கூறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் மண்பானைகள் தயார் செய்யும் பணி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் சுங்கான்கடை, தாழக்குடி, கண்டன் விளை, புலியூர்குறிச்சி, அருமனை, காப்புக்காடு, புதுக்கடை உள்பட பல்வேறு பகுதி களில் மண்பானை தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை யொட்டி விதவித மான மண்பானைகள் தயார் செய்யும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டுள்ள னர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மண்பா னைகள் செய்யும் தொழி லில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் தயார் செய்யப்படும் மண் பானைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது சுங்கான்கடை பகுதியில் மண்பானைகள் சாலை ஓரங்களில் அதிக அளவு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மண்பானைகளை வாங்கி செல்கிறார்கள் .ரூ.100 முதல் ரூ.350 வரை மண்பானைகள் விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் ஒருவர் கூறுகையில், குமரி மாவட் டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பானை தொழில் செய்யும் தொழி லாளர்கள் உள்ளனர். தற்பொழுது பொங்கல் பண்டிகை நெருங்கு வதையடுத்து இந்த பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொேரானா பரவல் காரணமாக தொழில் நலிவடைந்து காணப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம்போல் மண்பானைகள் விற்பனை நடைபெறும் என்று நம்பிக்கையில் நாங்கள் பலவிதமான மாடல்களில் மண் பானைகளை தயார் செய்து உள்ளோம். அரசு பொங்கல் தொகுப்பு தற்போது வழங்கி உள்ளது.

பொங்கல் தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்பை யும் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மண்பா னை தொழில் வளர்ச்சி அடையும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.5ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் இரு பருவ மழை பெய்வதால் ரூ.5 ஆயிரத்தை ரூ.10ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News