நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பறிமுதல்
- குடோனுக்கு சீல் வைப்பு
- ஓவன் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பிளாஸ்டிக் விற்பனையை கட்டுப்ப டுத்த மாநகராட்சி அதிகா ரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகி றார்கள். நாகர்கோவில் அலெக்சாண்ட பிரஸ்ரோடு பகுதியில் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து ஆணை யாளர் ஆனந்தமோகன் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் இன்று காலை அலெக்ஸ்சாண்டபிரஸ் ரோடு பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட னர்.அந்த பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாநக ராட்சி ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநக ராட்சி வண்டியில் ஏற்றி னார்கள். குடோனில் இருந்த சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து அந்த குடோனுக்கு சீல் வைக்கப் பட்டது.
இது குறித்து ஆணை யாளர் ஆனந்தமோகன் கூறுகையில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஓவன் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்ப டுத்தப்பட்டு வருவதாகவும் அது தடை செய்யப்பட்ட பை என்பதால் அதனை பொதுமக்கள் யாரும் வாங்கி பயன்படுத்த வேண்டாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கி வைத் தாலோ விற்பனை செய்தா லோ அவர்கள் மீதும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.