உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2022-11-17 09:30 GMT   |   Update On 2022-11-17 09:30 GMT
  • விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட வில்லை. இருப்பு விலை குறித்து விவரங்கள் கடைகளில் வைக்கப்பட வில்லை
  • உரம் இருப்பு மற்றும் விலை தொடர்பான பட்டியல் வைக்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்

நாகர்கோவில் :

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் இன்று நடந் தது.

மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் அதிகாரிகள் கூட் டத்தில் கலந்து கொண் டனர். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக் கொண்டார்.கூட்டத்தில் விவசாயிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ்ஆன்றோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட வில்லை. இருப்பு விலை குறித்து விவரங்கள் கடைகளில் வைக்கப்பட வில்லை. அதிக விலைக்கு உரங்கள் விற்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறை மூலமாக மானியங்கள் விவசாயிகளுக்கு வழங் கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் மூன்று போகம் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லினுடைய ஈரப்பதம் எப்பொழுதும் அதிகமாக தான் இருக்கும்.

நெல் கொள்முதல் நிலை யங்களில் 22 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிக்கி றார்கள். ஆனால் டெல்டா மாவட்டத்தில் 22 சதவீதத்திற்கும் மேல் ஈரப்பதம் இருக்கும் நெல்களையும் கொள்முதல் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

எனவே குமரி மாவட் டத்திலும் 22 சதவீ தத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்மு தல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாக்க மங்கலம் தென்னை உற்பத்தி நிலையத்தில் உள்ள முறை கேடுகளை கண்டு பிடித்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 2350 டன் உரம் இருப்பில் உள்ளது. உரம் இருப்பு மற்றும் விலை தொடர்பான பட்டியல் வைக்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். கால்நடை மருத்துவ மனைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக சென்று அந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையத்தில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விலை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்ப டுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News