உள்ளூர் செய்திகள்

குமரியில் 1 மாதத்தில் 50 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2022-08-27 07:31 GMT   |   Update On 2022-08-27 07:31 GMT
  • போலீசார் அதிரடி நடவடிக்கை
  • கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தனிகவனம்

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தனிகவனம் செலுத்தி வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரின் அதிரடி சோதனையின் காரணமாக தற்பொழுது கஞ்சா விற்பனை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது.

சமீபகாலமாக சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா  ரெயில் மற்றும் பஸ்களில் வாங்கி வரப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் பஸ் நிலை யங்களிலும் ரெயில் நிலை யங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

புனேயில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலை மையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பேக் ஒன்று இருந்தது.

அந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.ஆனால் யாரும் சிக்க வில்லை. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் அனாதையாக கிடந்த 12.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருந்தனர்.

மாவட்டம் முழுவதும் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 25 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் அந்த ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தார்கள்.அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 2.100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பணக்குடியை சேர்ந்த இராமையா (வயது 38) என்பதும் ராதாபுரம் லட்சுமிநகர் பகுதியில் சேர்ந்த ஆண்டனி சுரேஷ் (54) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News