உள்ளூர் செய்திகள்
குளச்சல் அருகே 840 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
- சிறு பிளாஸ்டிக் பைகளில் கேரளாவுக்கு கடத்தி செல்ல ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்
- 40 பிளாஸ்டிக் பைகளில் 840 கிலோ ரேசன் அரிசி இருந்தது.
கன்னியாகுமரி :
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கேயன் ஆகியோர் ரேசன் பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
கொட்டில்பாடு பகுதியில் செல்லும்போது அங்கு ஒரு தென்னந்தோப்பில் மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் பைகளில் கேரளாவுக்கு கடத்தி செல்ல ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.உடனே குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர்கள் மோகன் ஜோஸ்லின், தேவராஜ் ஆகி யோர் உதவியுடன் அரிசி மூட்டைகளை மீட்டனர். 40 பிளாஸ்டிக் பைகளில் 840 கிலோ ரேசன் அரிசி இருந்தது.
பின்னர் அவை உடையார்விளையில் உள்ள அரசு நுகர்வோர் வாணிபக் கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.