உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் சுற்றுலா நிறுவனத்திற்கு ரூ.22 ஆயிரம் அபராதம்

Published On 2023-03-25 07:28 GMT   |   Update On 2023-03-25 07:28 GMT
  • சுற்றுலா நிறுவனமும் இந்த 17 பேருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தது
  • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் உத்தர விட்டனர்.

நாகர்கோவில் :

முட்டம் பகுதியைச் சேர்ந்த யுஜின் சஜித் என்பவர் நாகர்கோவில் கே.பி ரோட்டிலுள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு வழியாக புனே செல்வதற்கு பணம் செலுத்தியிருந்தார்.

சுற்றுலா நிறுவனமும் இந்த 17 பேருக்கு விமான டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு சென்றடைந்த குழு வினர் நேரமின்மை காரண மாக புனே செல்லும் விமானத்தை பிடிக்க இயல வில்லை. இதனால் மீண்டும் கட்டணம் செலுத்தி புதிதாக பயணச் சீட்டு பெற்று வேறு ஒரு விமானம் மூலம் புனே சென்றடைந்துள்ளனர்.

பின்பு சுற்றுலா நிறுவ னத்திடம் தாங்கள் பயணம் செய்யாத விமானக் கட்ட ணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். சுற்றுலா நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த நுகர்வோர்கள் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர்.

ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு பயணம் செய்யாத விமானக் கட்டணமான ரூ.60 ஆயிரம், நஷ்டஈடு ரூ.17 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.82 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் உத்தர விட்டனர்.

Tags:    

Similar News