உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் உள்ள கல்வி ஆலோசனை நிறுவனத்திற்கு ரூ.63 ஆயிரம் அபராதம்

Published On 2023-04-02 07:03 GMT   |   Update On 2023-04-02 07:03 GMT
  • தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தாங்கள் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.
  • ரூ.1,10,600 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவிலைச் சார்ந்த பிரதீப் பால் மற்றும் குமரன் ஆகியோர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு கல்வி ஆலோசனை நிறுவனத்தில் வார்ஷா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் தாங்கள் உயர்கல்வி படிப்பதற்காக பணம் செலுத்தியுள்ளனர்.

கல்வி ஆலோசனை நிறுவனம் பணத்தை பெற்றுக் கொண்டு விசா மற்றும் படிப்பதற்கான வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

ஆனால் இருவருக்கும் வார்சாவில் பயில உரிய வசதிகள் செய்து தரப்பட வில்லை. ஆகவே கல்வி நிறுவனத்திடம் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். கல்வி நிறுவனம் பணத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்தவர்கள் நுகர்வோர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர்கள் நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர்கள் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கல்வி ஆலோசனை நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட கட்டணமான ரூ.47,600, நஷ்ட ஈடு ரூ.55,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.8,000 ஆக மொத்தம் ரூ.1,10,600 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News