தக்கலை அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
- கடன் தொல்லையால் விபரீத முடிவு
- மனைவி கலா புகார் மனு கொடுக்க புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
தக்கலை அருகே குழிக்கோடு வண்ட விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). கூலித் தொழிலாளி.
இவருக்கு இரண்டு பெண், ஒரு ஆண் பிள்ளைகளும் உண்டு. இரண்டு பெண் பிள்ளைகளும் திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில் ராஜேந்திரன் இளைய மகள் பிரசவத்துக்கு மொத்த செலவுகளையும் ராஜேந்திரன் பார்த்தார். பிரசவத்தின் போது பிறந்த குழந்தை இறந்து விட்டது. இதன் செலவுகளை கடன் வாங்கி செய்தார். மேலும் அந்த கடனை அடைக்க முடியாமல் ராஜேந்திரன் மனைவி வீட்டு வேலைக்கு சென்றார்.
மேலும் இந்த கடனை அடைக்க முடியாமல் தினசரி வீட்டிலிருந்து கடனை அடைக்க முடியவில்லை என பேசுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ராஜேந்திரனின் குடும்ப கல்லறை தோட்டத்திற்கு சென்று ஆசிட் விஷ மருந்து அருந்தி கல்லறை தோட்டத்தில் கிடந்து சத்தம் போட்டு உள்ளார்.
இதனை கண்ட குடும்பத்தினர் மற்றும் ராஜேந்திரன் சகோதரர் சேர்ந்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார். இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் மனைவி கலா புகார் மனு கொடுக்க புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மகளுக்காக கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.