நாகர்கோவிலில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த ரவுடி பலி
- கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகர்கோவில் :
வடசேரி ஆசாரிமார் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற செந்தில்குமார் (வயது 37).
ரவுடி பலி
இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. செந்தில்குமார் தற்பொழுது பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று செந்தில்குமார் கலெக்டர் அலுவலகம் அருகே கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக அவருடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன்இன்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.