ரெயில் நிலையத்தில் மாடியில் ஏறி ரகளையில் ஈடுபட்ட வட மாநில வாலிபர்
- ரெயில்வே போலீசாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
- 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டனர்
நாகர்கோவில் :
நாங்குநேரி ரெயில் நிலையத்தில் மாடியில் நின்று கொண்டு இன்று காலை வாலிபர் ஒருவர் ரகளை ஈடுபட்டு கொண்டி ருந்தார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த வாலிபரை கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால் அந்த வாலிபர் கீழே இறங்கவில்லை. மாடியிலேயே அமர்ந்தருந்தார். பலமுறை அழைத்தும் அந்த வாலிபர் இறங்காததால் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வாலிபர் மாடியில் அமர்ந்து கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர்.
ஆனால் அந்த வாலிபர் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக மாடியில் அமர்ந்திருந்த வாலிபரை மீட்க முயன்றனர். 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபரை மாடியில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்னர் அந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் போதையில் அந்த வாலிபர் மாடியில் ஏறி இருந்தது தெரியவந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரெயில் நிலையத்தில் வாலிபர் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.