உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய வாலிபருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

Published On 2023-07-04 09:17 GMT   |   Update On 2023-07-04 09:17 GMT
  • தப்பி செல்ல முயன்ற வரை போலீசார் தடுத்து நிறுத்தினர்
  • 2 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது

நாகர்கோவில் :

நாகர்கோவிலில் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகளை ஏற்றி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் செல்லச்சாமி தலைமை யிலான போலீசார் இன்று காலை கேப் ரோடு மற்றும் ராமன்புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதிக மாணவிகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 2 ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு ஆட்டோ 2-வது முறையாக சிக்கியது தெரியவந்தது. அந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப் பட்டது. ஹெல்மெட் அணி யாமல் வந்த வாலிபர்களை யும் தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர். செல்போன் பேசிக்கொண்டு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். போலீசை பார்த்த தும் அவர் தப்பி செல்ல முயன்றார். போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தனர். ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1000, செல்போனில் பேசியதற்கு ரூ.1000 என ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், செல்போன் பேசி விட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறை என்பதால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2-வது முறை சிக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து வாகனம் ஓட்ட வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது உயிருக்கு ஆபத்தானதாகும். எனவே அரசின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News