ஆரல்வாய்மொழி ரவுடி கொலையில் 2 வாலிபர்கள் கைது - கொன்று விடுவதாக மிரட்டியதால் முந்தி கொண்டதாக வாக்குமூலம்
- ஈத்தா மொழி போலீஸ் நிலைத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 19 வழக்குகள் உள்ளது
- ராஜ்குமார் என்னை தீர்த்து கட்டுவதற்கு முன்னர் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி அருகே மாதவலயம் அனந்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.
இவர் மீது தோவாளையில் நடந்த கணவன்-மனைவி கொலை வழக்கு, ஈத்தா மொழி போலீஸ் நிலைத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 19 வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டி யலிலும் ராஜ்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது.ராஜ் குமார் ஜெயிலில் இருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வந்தார். இவர், தூத்துக்குடி துறைமுகத்திலும் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜ்குமார் ஊருக்கு வந்திருந்தார். ராஜ்குமார் தனது நண்பர் கள் இரண்டு பேருடன் தாழக்குடி-மாதவலயம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரை வழி மறித்தது கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது அவரது நண்பர் கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். வெட்டுக்கா யங்களுடன் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் டி.எஸ்.பி. ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் சந்தவிளை பகுதியில் உள்ள சூப் கடை ஒன்றில் சூப் குடித்த போது அங்கிருந்த தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன், முருகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் கொலை செய் யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர்.
இந்த நிலையில் தோப் பூரை சேர்ந்த பிரவீன் (23), நாகர்கோவில் வடிவீஸ்வரம் மீனாட்சி கார்டனைச் சேர்ந்த சித்தார்த் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரவீனிடம் போலீசார் விசாரணை மேற்கொண் டபோது அவர் கூறியதா வது:-
நானும் எனது நண்ப ரும் சந்தவிளை பகுதியில் உள்ள சூப் கடை ஒன்றில் சூப் குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் எங்களிடம் தகராறு செய்தார் .என்னை அவர் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்தார். கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக கூறினார். மேலும் என்னை தீர்த்து கட்டுவதாகவும் தெரிவித்தார். நான் இதுகுறித்து எனது நண்பர் களிடம் தெரிவித்தேன். ராஜ்குமார் என்னை தீர்த்து கட்டுவதற்கு முன்னர் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். எனவே சம்பவத்தன்று இரவு ராஜ்குமார் அவரது நண்பர்களுடன் வந்தார்.
அப்போது நானும் எனது நண்பர்களும் சேர்ந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் தொடர்புடைய 3 பேரை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர். போலீ சார் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.