உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் கொரியர் நிறுவனத்திற்கு வந்த கஞ்சா பார்சல்கள்

Published On 2022-06-19 10:13 GMT   |   Update On 2022-06-19 10:13 GMT
  • போலீசார் தீவிர விசாரணை
  • குமரி மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வெளியூரிலிருந்து கஞ்சா பார்சல்கள் வந்திருப்பதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோட்டார் போலீசார் சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் கொரியர் நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

இதையடுத்து அதன் உரிமையாளரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.

இதையடுத்து போலீசார் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கொரியர் நிறுவனத்தை திறந்து சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News