உள்ளூர் செய்திகள்

அழகிய மண்டபத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-12 07:37 GMT   |   Update On 2022-06-12 07:37 GMT
  • டாஸ்மாக் கடையினால் கடும்போக்கு வரத்து நெருக்கடி
  • கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி :

தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை அழகியமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த கடையினால் அந்த பகுதியில் கடும்போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி குடிமகன்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. பல விபத்துக்கள் அடிக்கடி இந்த பகுதியில் ஏற்படுகிறது. மற்றும் குடிமகன்கள் ரோட்டோரம் நின்று மது அருந்தி விட்டு பாட்டில்கள், கப்புகள் அந்த பகுதியில் போடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது.

இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பல்வேறு கட்சியினர், அமைப்புகள் போராட்டம் நடத்தின. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வார்டு கவுன்சிலர்கள் இந்த கடையை அகற்றக்கோரி காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்த னர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். இது வரைக்கும் எந்த முடிவும் எடுக்காத காரணத்தினால் காட்டாத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ் தலைமையில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெபதாஸ், விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான், துணைத் தலைவர் ஞானஜெபின், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சர்மிளாஏஞ்சல், வார்டு உறுப்பினர்கள் செல்வின் ஜெபகுமார், ஜெசிபாத்திமா எல்சி, ஆன்றோ ஜோஸ் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News